16545 நான் ஓர் எழுத்தாளன் : கவிதை நூல்.

புயல் (இயற்பெயர்: பெ.ஸ்ரீகந்தநேசன்). யாழ்ப்பாணம்: தாய்மொழி வளர்ச்சி மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், கச்சேரியடி).

72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7736-02-0.

அனுபவங்களோடு கூடிய உண்மைச் சம்பவங்களைப் படம்பிடித்துக் காட்டும் 68 கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல் சமூகத்தின் சகல பக்கங்களையும் புரட்டிப் பார்க்க முயன்றுள்ளது. பட்ட மரங்கள், ஆண்டான் அடிமை, பசுமையான நினைவுகள் எனத் தொடர்ந்து இழிவிழுந்தவள் என்ற கவிதை ஈறாக இடம்பெற்றுள்ள கவிதைகளில் பல சமீபகால நிகழ்வுகளும் அடங்கியுள்ளன. உதாரணமாக ”பட்ட மரங்கள்” என்ற கவிதையில் நாடு முழுவதிலுமுள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள், முன்னெடுக்கும் போராட்டங்களின் வலிகள் என்பவற்றை வெளிப்படுத்துகின்றது. நடுகல் என்ற கவிதையில் துயிலும் இல்லங்களை இராணுவம் எவ்வாறு சிதைத்து இறந்தவனுக்கு புதைகுழி கூட நிரந்தரமில்லை என்று நிரூபித்ததோ அதன் உண்மைத் தன்மையை இக்கவிதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஏனைய பதிவுகள்

You bet Your life By Evelyn Cullet

Articles Tour of britain 2024 standings | You can Wager Your lifetime Which are the Recommendations To ensure An extended Lifetime of Aquatic Varnish? Web