செ.லோகராஜா. மூதூர்: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 64, பாரதி வீதி, முன்னம்போடி வெட்டை, பாலத்தடிச்சேனை, தோப்பூர், 1வது பதிப்பு, மார்ச் 2016. (திருக்கோணமலை: சிறீராம் பிரின்டர்ஸ், இல.159 A, கடல்முக வீதி).
xvii, 67 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43127-0-8.
கவிஞர் கலைமாறன் என இலக்கிய உலகில் பவனிவரும் செல்லத்துரை லோகராஜா, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுபவர். கல்வித் துறையோடு, சோதிடக்கலை, சமயப்பணி, சமூகப்பணி முதலான வேலைப் பளுக்களுக்கும் மத்தியில் இக்கவிதை நூலைப் பிரசவித்துள்ளார். இந்நூலில் அழகி அவள் யாரோ?, இளமைக்கால இனிய நினைவுகளே, உன்னை நினைக்கையிலே, உனக்காகக் காத்திருப்பேன், எந்தனுயிர்க் காதலியே, எழிலுருவை என்னென்பேன், என் ஆசை நிலவே, என்ன இந்த மாற்றமோ?, என்னை அழவிடு, ஏன் படைத்தாய் இறைவா?, ஒற்றுமையே உயிர்நாடி, கவிதையின் இயல்பு என்னே?, கவிதைக் காதலியே, கவரிமான் சாதி, கற்பே உன் கதியென்ன?, காதலா சாதலா?, குடும்பம் ஒரு கோவில், சிந்தைக்கு விருந்து வைத்தாய், தென்றலே நீ தீண்டாயோ?, நிலைக்கட்டுமே சமாதானம், நிலவே முகம் காட்டு, நெஞ்சில் நிலைக்கும் இனிய நினைவுகளே, பாரதியைப் பாட்டினிலே பார்த்தேன், பாரதியே மீண்டும் நீ வாராயோ?, புதியதோர் உலகம் செய்வோம், பொன் வண்ணத் தேரினிலே, மயக்குறும் மஞ்சரியாள், முத்தமிழ் பாவெடுத்து, மென்மையுறும் நல்லாட்சி, யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.