16548 நிலாச்சோறு.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

vi, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98909-2-3.

தான் தினமும் பார்க்கும் கேட்கும் அக, புற வாழ்வின் அம்சங்களைப் பாடுபொருளாக்கி அதனை ஆசிரியப்பா, வெண்பா போன்ற பாக்களாலும், ஆசிரிய ஒத்தாழிசை, விருத்தங்களாலும் தன் கற்பனை கலந்து படைத்துள்ளார். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளை பழைய பாவினங்களுக்குள் புதுமைக் கருத்துக்களைப் புகுத்தி இக்கவிதைகளை யாத்துள்ளார். தமிழின் இனிமை, முத்தமிழை வணங்கித் தொழுவோம், பிள்ளைக்கனி அமுதே, கண்களும் கவிதை பேசிடும், அன்பு, அகத்தின் அழகு முகத்தில் தெரியும், அடியிலே பெருக்கெடுத்து ஆடியும், நினைவுகளின் சுகந்தம், சுகம் தருமோ சுதந்திரம், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடுவாய், இதயக்கூட்டின் விம்பங்கள், இயற்கையே இன்பம், தந்தை, பேரன்பின் பெருவெளி, அறிவினை விருத்தி செய், வாழ்வெனும் வானவில், காதலி, வாழ்க்கை, நீதானே, வேடதாரிகள், தேடல், நீதி, நெஞ்சு பொறுக்குதில்லை, நேர்மை, ஆசை, துரோகம் துரத்து, தம்பதியர் தினம், மாற்றிடு அப்பனே, சுற்றுச் சூழல் காப்போம், நிலாச்சோறு, வாழும் வரை போராடு, விடியலைத்தேடி, பெண்ணென்ன, பேதைக்கு நீதி, காதல் நினைவு, அற்பர், போதை, காலைக்காட்சி, மாணவர்களுக்கு, புதிதாய்ப் பிறப்போம், பாரதிதாசன், மனித உரிமை போற்றுவோம், மழை, விலையேற்றம், நோக்கும் திசையெங்கும் பாரதி, நிலையாமை,  பெண்ணெனும் பெருஞ்சுடர், மகளென்னும் தாய், அற்ப நரர் நாம், மலர், அச்சமில்லை அச்சமில்லை, மெத்தப் படித்தவன், கலாசாரம், தடுப்பு ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Best Online casino Usa

Posts Mobile Pay N Enjoy Deposits Regional Gambling enterprises In the Arizona Help guide to Looking No deposit Added bonus Rules In the us Exactly