16554 பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்.

எஸ். நளீம். வாழைச்சேனை-5: மைநா வெளியீடு, இல. 5, மஹ்முத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சாய்ந்தமருது: எக்சலன்ட் பிரின்ட்).

90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-624-95962-0-7.

90களின் நடுப்பகுதியிலிருந்து கவிதைகளை எழுதிவருவோரில் முக்கியமான ஒருவராக நளீம் குறிப்பிடப்படுகிறார். வாழைச்சேனையில் வசித்து வரும் இவர் கவிதை, ஓவியம், சிறுகதை என்பவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஓடை, மைநா, யாத்ரா போன்ற சஞ்சிகைகளுக்கு ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் செயற்பட்டவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்துள்ள இவர் கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைக்கான டிப்ளோமா கற்கைநெறியினையும் பூர்த்தி செய்துள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகளில் எழுதப்பட்ட கவிதைகளுள் தேர்ந்த 36 கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. கண்ணீர் மட்டுமின்றி கோபமும் கருணையும் காதலும் இயற்கையும் இவரது கவிதைகளில் வெளிப்படக் காணமுடிகின்றது. பல்லிகளுக்குப் பயந்த இந்த வண்ணத்துப்பூச்சிகள் பல்லிகளை மாத்திரமல்ல எத்தனையோ முதலைகளையும் பூதங்களையும் கண்டுகொண்டன. இருப்பினும் கதவொன்று திறந்து கிடப்பதைக் கண்டு கொள்ளாமலே கூண்டுக்குள் வாழ்க்கையோட்டும் இந்த வண்ணத்துப் பூச்சிகள் கண்திறந்து பல்லிக்கு இரையாகாமல் பாதுகாப்பாக  வெளிவரவேண்டும், அவற்றின் மனங்களில் நம்பிக்கை துளிர்க்க வேண்டும், நாடு சிறக்கவேண்டும் என்பதே இக்கவிஞனின் வேண்டுதலாகின்றது.

ஏனைய பதிவுகள்