16559 பூந்தேனில் கலந்து (கவிதைப் பூக்கள்).

செ.லோகராஜா. மூதூர்: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 64, பாரதி வீதி, முன்னம்போடி வெட்டை, பாலத்தடிச்சேனை, தோப்பூர், 1வது பதிப்பு, கார்த்திகை 2020. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xviii, 50 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-43127-8-4.

கவிஞர் கலைமாறன் என இலக்கிய உலகில் பவனிவரும் செல்லத்துரை லோகராஜா, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுபவர். கல்வித் துறையோடு, சோதிடக்கலை, சமயப்பணி, சமூகப்பணி முதலான கடின உழைப்புக்கு மத்தியில் இக்கவிதை நூலைப் பிரசவித்துள்ளார். இந்நூலில்அழகான மலரொன்று கண்டேன், அத்திமரப் பூவும் அச்சப்படுமா?, ஆனந்தப் பூங்காற்றே, இளமையெனும் பூங்காற்று, கையில் வந்த பூந்தோட்டமே, செந்தாளம் பூவினிலே, தாமரையாள் ஏன் சிரித்தாள்?, நான் தேடும் செவ்வந்திப் பூவிது, பூக்களைத் தேடுகின்ற வண்டுகளே, பூந்தேனில் கலந்து, பூமியில் பூப்பூத்ததா?, பூமகளின் தங்கமே, பூவிடம் நீ சொல்லு, பூவிலே உன் வாசத்தை, பூவோடு சேரும் காற்றாக, பொன்னான மலரல்லவோ, மலரே ஏனிந்தக் கோபம், மலரத் தெரிந்த மனமே, மலரே ஒரு வார்த்தை பேசு, மலரே மௌனமா?, மலரோடு உறவாடும் தென்றலே, மாலை வேளை மலர்களே, வாச மலர்க் கொடியே, வாசமில்லா மலரிது, ஜாதி மல்லிப் பூவே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் சங்கமித்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Better On-line casino Real cash

Blogs Over 30% Welcome Added bonus Around $1 100000 Benefit & More For the Better Cellular Gambling enterprises! Microgaming Slot Online game The new sky