எஸ்தர். சென்னை 600040 : பூபாளம் புத்தகப் பண்ணை, அண்ணா நகர் மேற்கு, 1வது பதிப்பு, மே 2022. (சென்னை 600 089: ரமணி பிரின்ட் சொல்யூஷன்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-93-94414-00-6.
எஸ்தர் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் -டிக்கோயா பிரதேசத்தில் சாஞ்சிமலை தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். பேராதனை (அரசறிவியல் இளமாணிப் பட்டப்படிப்பு), கொழும்பு (பத்திரிகை இதழியல்) ஆகிய பல்கலைக்கழகங்களில் தன் உயர் கல்வியைப் பெற்றவர். ”கால்பட்டு உடைந்த வானம்” இவரது முதலாவது கவிதை நூலாகும். எஸ்தரின் கவிதைகளின் ஒரு முக்கிய அம்சம் சமகாலத்தின் அரசியலைக் கவிதைகளில் இணைப்பதாகும். ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது கடந்த மூன்று வருடங்களாக அரசியல்வாதிகளின் நிறைவேறாத வாக்குறுதிகளாகத் தொடர்கிறது. ஆயிரம் ரூபாய் சம்பளக் கனவுகள், சிறுத்தை, குளவி போன்றவற்றால் தொழிலாளருக்கு ஏற்படும் அபாயங்கள் என சமகாலப் பிரச்சினைகள் இவரது கவிதைகளில் உள்வாங்கப்பட்டுள்ளன. மொத்தம் 65 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69955).