16566 மரபின் விழுதுகள்.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

xvi, 64 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-97879-8-8.

சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரச்சினைகளையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தழுவிச் செல்கின்றன. சமூகத்தில் புரையோடிப் போன பிரச்சினைகள் தொடர்பிலும் புதிதாகத் தோன்றிய சமகாலப் பிரச்சினைகளிலும் உடுவிலூர் கலாவுக்குள்ள ஈடுபாடு மரபுக் கவிதை வடிவங்களிலும் மரபு சாரா வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ள அவரது கவிதைகளில் திறம்பட வெளிப்படுகின்றன. குறள்வெண் செந்துறை (22 கவிதைகள்), நிலைமண்டில ஆசிரியப்பா (1 கவிதை), நேரிசை ஆசிரியப்பா (2 கவிதைகள்), அறுசீர் விருத்தம் (18 கவிதைகள்), எழுசீர் விருத்தம் (1 கவிதை), வஞ்சி விருத்தம் (3 கவிதைகள்), பதினாறு சீர் விருத்தம் (1 கவிதை), கலி விருத்தம் (4 கவிதைகள்), வெண்கலிப்பா (1 கவிதை), சிந்தியல் நேரிசை வெண்பா (2 கவிதைகள்), குறள் வெண்பா (11 கவிதைகள்), இரட்டைக்கிளவி வெண்பா (1 கவிதை), இருகறள் வெண்பா (1 கவிதை), இன்னிசை வெண்பா (2 கவிதைகள்), பஃறொடை வெண்பா (2 கவிதைகள்), ஒருவிகற்ப இன்னிசை வெண்பா  (1 கவிதை), வஞ்சித்துறை வெண்பா (1 கவிதை), குறட்டாழிசை (2 கவிதைகள்), கழிநெடிப்பா (1 கவிதை), கட்டளைக் கலித்துறை (2 கவிதைகள்), கட்டளை வெண்பா (1 கவிதை) என மொத்தம் 80கவிதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

A real income Slots

Blogs Exactly how many Some other Buffalo Slot machines Have there been? – winning at video slots Gambling establishment Orgs Current Free Games Video slot