16567 மல்லிகை மொழி கவிதைகள்.

ஆர்த்திகா சுவேந்திரன். யாழ்ப்பாணம்: ஆர்த்திகா சுவேந்திரன், தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xvi, 329 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-624-98245-0-8.

இந்நூலில் கொஞ்சம் வணக்கம் (7 கவிதைகள்), கொஞ்சம் தமிழ் (7 கவிதைகள்),  கொஞ்சம் காதல் (21 கவிதைகள்), கொஞ்சம் இயற்கை (21 கவிதைகள்), கொஞ்சம் கணிதம் (2 கவிதைகள்), கொஞ்சம் கவிதை (8 கவிதைகள்), கொஞ்சம் பெண்மை (17 கவிதைகள்), கொஞ்சம்  சமூகம் (19 கவிதைகள்), கொஞ்சம் கானல் (12 கவிதைகள்),  கொஞ்சம் வலி (40 கவிதைகள்), கொஞ்சம் நம்பிக்கை (17 கவிதைகள்) எனப் பதினொரு பிரிவுகளின் கீழ் 171 கவிதைகளைப் பதிவுசெய்தள்ளார். “ஆர்த்திகா சுவேந்திரன் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவியாக உயர்கல்வியைக் கற்றுவரும் வேளையில் இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். தனது கல்வித்துறைச் செயற்பாடுகளின் வெளிப்பாடாகவும், மனிதத்துவ சமுதாய வாழ்வின் அழியாத கோலங்களாகவும் இந்நூலின் கவித்துளிகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மனித தத்துவம், அன்பு, தன்னம்பிக்கை, நீதி, சாதனை, நேர்மை, தூய்மை, ஒற்றுமை என்பன வெற்றியடையவும் மானுடத்தின் முழுமையைக் காணத்துடிக்கும் எமது இலக்கியப் பண்பாட்டின் செழுமைக்கும் இந்நூல் வெளியீடு உரமூட்டுகின்றது.” (பேராசிரியர் கலாநிதி பா.தனபாலன், பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்

Best Horse Race Gaming Web sites

Articles What Football Must i Wager On the internet In america? Betway Best Sports To help you Wager on In america Extremely important Attributes of