16569 மீண்டுமொரு முறை: கவிதைகள்.

க.அன்பழகன். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 N, பீர் சாஹிபு வீதி).

vii, 48 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53372-6-7.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பட்டதாரியான அன்பழகனின் முதற் தொகுப்பாக வெளிவரும் இந்நூலில் மானிடத்தின் அவலங்களையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் சித்திரித்துள்ளார். இத்தொகுப்பில் இவர் எழுதிய இன்றும் நினைவில், நகர வாழ்வு, கெட்டுப்போன வாழ்வு, எரிந்துபோன கிராமம், முற்றுகை, என்று மாறும் இந்நிலை, அன்புள்ள அப்பா, அன்பான அண்ணனுக்கு, இன்னுமொரு பிரிவு, இன்றைய இளைஞன், அழகியா?, காதல் என்பது, தாகம், காத்திருப்பேன், கறுப்பு ஜீலை, செத்துப் பிழைக்கும் சமாதானம், மிஞ்சி நிற்பது, பொறுத்திரு, சர்வாதிகாரி, தேவையா இவ்வலகுக்கு, பொய்மையின் பொய்மை, குஜராத் செய்த குற்றமென்ன?, பூமிக்கொரு வேண்டுகோள், அலையாதே, கனவு மெய்ப்பட்டது, சதி, கானல் கோலம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் கணபதிப்பிள்ளை அன்பழகன் ஆலங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கலாசார அலுவலராகக் கடைமாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra 2022

Content Vegas paradise casino review: Avis Sur Les Symboles De Book Of Ra De Conclusie Over Book Of Ra The Book of Ra Deluxe edition