16571 மூச்சுக் காற்றின் முணுமுணுப்பு: கவிதைகள்.

ராணி சீதரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

vi, 93 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 19×13 சமீ.

இந்தக் கவிதைத் தொகுதியில் இன உணர்வும், அது சார்ந்த யுத்த வடுக்களும், சமூக நோக்கும் கலந்த உணர்ச்சி வெளிப்பாடுகள் கவிதைகளாக வடிவம் பெற்றுள்ளன. பொழுதே நீயும் நில்லாயோ?, கிராமத்து நினைவு, போதிமரமும் பொங்கிய பாலும், தாய்மை, ஆசிரியம், கணக்கெடுப்பு, இருந்துவிடு அங்கே, உயிரின் தேடல், பூத்தது புதுவருஷம், எழுந்திடுக, உயிர்ச் சுமை, கனவு, போர், மறுபடி எழுவர், நினைவுகளில் தோய்தல், பாதை திறக்காதோ?, ஓதுவது வேதம், முதுமை, திருவிழா, மழை, சுயம்வரத் தாலி, இசைதல், ”ஏ”க்கா ஏக்கம், புலமைப் பரிசில் பரீட்சை, மூச்சுக்காற்றின் முணுமுணுப்பு, வக்கிரப் பூக்கள், படைப்பு, திறவுகோல், வாழ்க்கை, காதல் புத்தகம், புகலிடப் பரீட்சை, எதிலியர் கழகம், உறவும் நட்பும், கவிதை, தமிழின் உறவு, பர்தா அணிந்த பாவை, மரணத்தின் வலி, பொழுதும் புலராதோ?, ஏழ்மை, அகால மரணம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 40 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எழுத்தாளர் ராாணி சீதரன் கல்விப் புலத்தில் ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து ஆசிரிய ஆலோசகராகவும், தேசிய கல்வி நிறுவகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றிய காலங்களில் தமிழ் ஆசிரியர்கள் தமது வகுப்பறைக் கற்பித்தலை மேம்படுத்துவதற்கு சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Better Black-jack Sites Real cash 2024

Content How to Gamble Black-jack On line: Legislation and methods What is the family border inside the blackjack? Free Vintage Black-jack Simulation Double Deck Black-jack

Casino Bonusar Inte me Omsättningskrav 2024

Content Spelklubben Casinostugan Garant: Testa Tryggt Tillsammans Svensk Licens Frequently Asked Questions About Casinostugan Korta Fakta Om Casinostugan Försåvitt en alternativ många val inom något