நாச்சியாதீவு பர்வீன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xii, 56 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-52526-0-7.
ஜீவநதியின் 36ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. பர்வீனின் படைப்புக்கள் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து அவற்றிற்குத் தீர்வுகாணும் வழிவகைகளை கூறுபவைகளாக சமூக நோக்கோடு அமைந்துள்ள படைப்புகளாகும். இவரது படைப்புகளில் நில, மனித நேசிப்பு அதிகமாகக் காணப்படுவது சிறப்பு. கவிதைக்குரிய பண்புகளோடு கவிதைகளைப் படைத்துவரும் இளம்படைப்பாளர்களில் பர்வீன் அதீத கவனத்துக்குரியவர். நாச்சியாதீவு என்ற கிராமத்தில் பிறந்த இவர் தனது படைப்புகளால் அந்தக் கிராமத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றார். ஆசான்களுக்கு ஒரு அஞ்சல், மீனவனின் ஒரு நாள், நாச்சியாதீவு மான்மியம், செத்துப்போன காதலின் சாகாத நினைவுகள், மனைவி எனும் உயிர், காதலின் கல்வெட்டு, மூத்தம்மா, உம்மா என்னும் தேவதையே, கவலை, சொல்ல மறந்த கதை, கனவு கலைந்து போனதம்மா, அந்த ஒரு நாள், தலைப்பில்லாத என் கவிதை, மூன்றாவது இதயம், அரசமர நிழலில், நதிகளின் மரணம், என் மரணம், முருங்கை மரத்தின் கடைசி நாள், விவசாயி, பழமில்லா மரம், அந்தப் புளியமரம், ஒற்றைப் பனை, ஒற்றை இரவும் ஊமைக் காதலும், பொல்லாத கலகக் காரன், ஒரு துயரத்தின் மொழி, சூரியன் பற்றி, இன்னொரு நிஜம், யதார்த்தத்தின் கோடுகள், குப்பைகள், என் எதிரிகளுக்கு, காசா பள்ளத்தாக்கின் குருதி சிந்தி வாழ்விழக்கும் ஒரு சகோதரனுக்கு ஆகிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.