க.பிரேம்சங்கர். யாழ்ப்பாணம்: க.பிரேம்சங்கர், சுன்னாகம், 1வது பதிப்பு, ஆவணி 2022. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், இல. 34, பிறவுன் வீதி).
xii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×16 சமீ., ISBN: 978-624-98971-0-6.
“லௌகீக மயக்கத்திலும் அது தந்த விரக்தியில் ஆன்மீகத் தேடலும் நிறைந்த சிக்கலான வாழ்வில் மெய்யென நினைத்ததெல்லாம் பொய்தானோ? என்ற கேள்வியோடு லண்டனில் ஓய்வின்றிய உழைப்போடு ஓடும் புகையிரதம், சமையற்கட்டு, வேலைத்தளம் என்று பல இடங்களில் அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் அந்த தேசத்தின் நிசங்களைத் தடவியபடி என்னாட்டு ருசிகளையும் உள்ளடக்கி கவிதையாய் உதிர்ந்து நிறைகிறது இந்தப் புத்தகம்” (என்னுரையில் க.பிரேம்சங்கர்). கவிக்கூத்தன் பிரேம்சங்கர் எழுதிய 83 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வருகிறார்.