16576 மொக்குள்: பாடல், கவிதைத் தொகுப்பு.

மறவன்புலோ செல்லம் அம்பலவாணர். கொழும்பு 15: செ.அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 80 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-42626-9-0.

இணையத்தின் வழியாக பன்னாட்டு கவிதைக் குழுமங்களுக்கும், அவர்களால் நடாத்தப்பெற்ற கவிதைப் போட்டிகளுக்கும் சமர்ப்பித்த படைப்பாக்கங்களின் தேர்ந்த தொகுப்பாக ஐம்பது கவிதைகளை உள்ளடக்கி ஆசிரியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். ஏற்கெனவே ‘முகை” என்ற பெயரில் 50 கவிதைகளுடன் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவை சபையினரிடம் பதிப்பிற்காக வழங்கப்பட்ட நூல் இன்னமும் பிரசுரமாகாத நிலையில், மலரின் வளர்ச்சிப் பருவத்தின் அடுத்த கட்டமான “மொக்குள்” பருவத்தை முன்நிறுத்தி இந்நூலுக்கு அப்பெயரை ஆசிரியர் வைத்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், தமிழன்னை, சமூகம், மெட்டுக்குப் பாட்டு, கவிதையில் கலைச்சொற்கள், கிராமத்துப் பாடல்கள், இணையவழிக் கவியரங்கம் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17788 மலருமோ உந்தன் இதயம்.

ரோசி கஜன். சென்னை 61: ஸ்ரீ பதிப்பகம், புதிய எண். 17, பழைய எண் 16, ஸ்டேட் பாங்க் காலனி விரிவு, 2வது பிரதான சாலை, நங்கநல்லூர், 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை