16577 மௌனத்தின் மீது வேறொருவன் (கவிதைகள்).

கருணாகரன். யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 107 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22.5×14 சமீ., ISBN: 978-81-90789-14-1.

கவிஞர் கருணாகரன் பன்முகத் தளங்களில் இயங்கிவருபவர். இவரைப் போலவே இவருடைய கவிதைகளும் பரவலான அறிமுகத்தைப் பெற்றவை. ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களைக் குறித்து 1980களிலிருந்தே தொடர்ச்சியாக சிந்தித்தும் எழுதியும் வருபவர். தான் வாழும் காலத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர். அவரது கவிதைகளுடன் தொடர்ச்சியாகப் பயணிக்கும் வாசகர்களால் இதனை கூர்ந்து அவதானிக்க முடியும். தனது சமூகத்தைப் போலவே மற்றச் சமூகங்களின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அவர் இருக்கின்றார். தான் வாழும் காலத்தைச் சூழ்ந்திருக்கின்ற அச்சத்தையும் நெருக்கடியையும் தாண்டி கவிஞர் கருணாகரனின் கவிதைகள், அதிகாரங்களை தொடர்ச்சியாக எதிர்த்தே வருகின்றன. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் சமூகங்களின் குரல்கள் அவரது கவிதைகளில் தீவிரமாக ஒலிக்கின்றன.  அச்சமூகங்களின் சிதிலங்களை கவிஞர் கருணாகரன்,  தன் இரத்தத்தின் ஊடுபாய்வாக தன் படைப்புக்களின் வழியாக நகர்த்திக்கொண்டே இருக்கின்றார்.

ஏனைய பதிவுகள்

Tree Of Fortune

Content Nextgen gaming slots de vídeo | Símbolos Do Divine Fire Slot Jackpot Rodadas Acessível Aquele Bônus Sem Armazém Arruíi PIX bancário foi lançado exclusivamente