16578 மௌனம் தின்னும் உடல்.

திலகா அழகு. சென்னை 600093: பூவரசி வெளியீடு, இல. 2, 2வது தளம், முதலாவது குறுக்குத் தெரு, புஷ்பா கொலனி, சாலிக்கிராமம், 1வது பதிப்பு, மார்ச் 2020. (சென்னை 600093: பூவரசி பதிப்பகம், இல. 2, 2வது தளம், முதலாவது குறுக்குத் தெரு, புஷ்பா கொலனி, சாலிக்கிராமம்).

96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-81322-81-8.

வாழ்தலின் மீதான விருப்பமும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் கொண்ட பல பெண்களை அடையாளம் காட்டாது, ஒரே பெண்ணின் பல மாதிரிகளை இக்கவிதைகள் முன்நிறுத்துகின்றன. காதலையும் காமத்தையும் தயக்கமின்றிப் பேசும் திலகா அழகுவின் கவிதைக்குள் இரவுகளும் சாரைப் பாம்புகளும் மௌனத்தின் இரைச்சல்களும் அசைகின்றன. அலைகின்றன. மூச்சிரைத்துத் திரிகின்றன. இவற்றை வாசிக்கும்போது திலகா அழகுவிடம் சொற்கள் லாவகமாக வந்து வரிசை கட்டுவதையும் நீங்கள் உணர்ந்திருக்கக்கூடும். எண்ணிக்கையில் பெரும் அளவினதாக இருக்கும் இவ்விருத்தல் கவிதைகளைத் தாண்டி வேறு பொருண்மைகளைப் பேசும் கவிதைகளும் இருக்கின்றன. குடும்ப உறவுகளின் பாசம் அல்லது இன்மை, சூழலில் இருக்கும் மனிதர்கள் மீதான அன்பு அல்லது கோபம் போன்றனவற்றையும் கவிதை வடிவம் சாத்தியப்பட்ட நிலையில் எழுதிப்பார்த்திருக்கிறார். எதையும் நான்-நீ என்னும் எளிய கவிதை வடிவத்தில் எழுதிக்காட்டும் திலகா அழகுவின் முதல் தொகுப்பு இது. 60 கவிதைகளைக் கொண்டுள்ளது. மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட திலகா அழகு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். (பேராசிரியர் அ.ராமசாமி, கருத்துரையில்).

ஏனைய பதிவுகள்

On the internet Psychic Learning

It may be beneficial to determine whether you have got a preference for a specific understanding build or you are accessible to various other means.