16580 யாருக்கோ பெய்யும் மழை (கவிதைகள்).

தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 160 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-25-3.

இத்தொகுப்பில் ”மலர்” என்ற பிரிவில் 38 கவிதைகளும், ”முகை” என்ற பிரிவில் 17 கவிதைகளும், ‘மொட்டு” என்ற பிரிவில் 17 கவிதைகளும், ”அரும்பு” என்ற பிரிவில் 22 கவிதைகளுமாக மொத்தம் 94 கவிதைகள் தேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. ”கவிதை ஒரு இளவரசி போல நான் அணுக முடியாத் தூரத்தில் எப்போதும் இருப்பதாகவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. எழுதிய கவிதைகள் எங்கெங்கோ சிதறிக் கிடந்தன. எனது கவிதைகளை நானே திரும்பிப் பார்க்கவில்லை. வாழ்க்கை ஓய்வொழிச்சலின்றி என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத கோவிட் நோய்த்தொற்று பதினான்கு நாள்களுக்கு என்னை நாலு சுவர்களுக்குள் முடங்க வைத்தபோது, கவிதை இளவரசி சாவதானமாய் என்னோடு பேசத் தொடங்கினாள். இதுவரைக்குமான எனது கவிதைகள் எங்கே? மனது பதறத் தேடத் தொடங்கினேன். இதுகாலவரையில் எழுதித் தீர்த்த கவிதைகளை வடிகட்டியெடுத்தேன். எழுத்தின் அலைவரிசையில் எனக்கான முதல் அங்கீகாரம் கவிதையல்லவா? இத்தனை ஆண்டுகளிலும் யாருக்காகவோ பெய்து கொண்டிருந்த மழைத்திவலைகளில் என் கரங்களில் அள்ள முடிந்தவற்றை அள்ளியெடுத்திருக்கிறேன். அவற்றைப் பருகும் போது உங்களுக்கு மழையின் சுவை கிடைப்பின் என்னைப் பாக்கியசாலி என்பேன்” (தாட்சாயணி, பின்னட்டைக் குறிப்பு)

ஏனைய பதிவுகள்

Multiple Red hot 777 Slot

Blogs The newest #step one Free Ports Games: Big Panda slot machine Has and you will Icons In the 777 Games Kind of Games Signs