கே.எல்.நப்லா. தெகிவளை: அ – பதிப்பகம், 05, Middle Way, Off Kawana Broadway, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (ராஜகிரிய: டிசைன் டெஸ்க்).
xii, 71 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5139-00-2..
நப்லா இலங்கையில் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் மற்றும் உளவியல், உளவளத்துணை கலைமாணிப் பட்டதாரி. தற்போது துணை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு ”கவிதை என்றான கிறுக்கல்கள்” 2013இல் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது தொகுப்பாகும். இத்தொகுப்பில் “முடிவில் ஒரு நிழல்” என்ற கவிதை தொடங்கி “நிழலை வரையத் தெரியும் எனக்கு” என்ற கவிதை ஈறாக நப்லா எழுதிய 52 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.