16586 வேலணையூர் சுரேஷின் குறும்புப்பா 100.

வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). வேலணை: தாய் சக்தி கலைக்கூடம், புளியங்கூடல், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-98901-0-7.

“என்னிடம் பா யாப்பறி கவிதை மாணவன். பல்லாயிரம் மனங்களில் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் எழுச்சி கானங்களின் தந்தை. ஈழச் சைவக் கோவில்கள் பலவற்றுக்குப் பக்தி இசைப் பாடல்கள் பாடிப் புண்ணியம் தேடிவரும் புலவன். உள்நாட்டு, வெளிநாட்டுக் கவியரங்குகளில் உரிமைப்பா முழக்கம் செய்து வரும் பாவலரேறு. “தித்திப்பா” சிறுவர் நூலைப் பாடியவன் இன்று குறும்புமயமான குறும்பாக்கள் நூறை சொக்குப்பொடி கலந்த ஓமப்பொடியாக வழங்குகிறான். வாழ்க வளர்க அவனது படைப்பூக்கம்” (பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்).

ஏனைய பதிவுகள்