16587 ஜின்னாஹ்வின் குறும்பாக்கள் 550.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு: அல்ஹாஜ் T.M.முனாப் அஸீஸ், பிரின்ட் சிட்டி).

x, 214 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1000., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-97389-2-8.

இதுகாலவரை தொன்மையான மரபுவழியில் பல காவியங்களை எழுதிவந்த கவிக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், கொரோனா வீடடங்கலை பயன்படுத்தி குறும்பா யாப்பில் இந்நூலை சுவையாக எழுதி வழங்கியுள்ளார். கரு சிதைவுறாதிருக்க சிற்சில இடங்களில் மட்டும் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறும் அவர், குறும்பா என்பது குறும்புகளை மையப்படுத்தி வாசகனைச் சிந்திக்கச் செய்வதாக இருத்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து  சற்றே விலகி,  குறும்பா என்பது நல்ல கருத்துகளை வெளிப்படுத்துபவையாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தை வித்தாக்கி இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான செய்யுள்களை அதே யாப்புக்குள் படைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்