க.வாசுதேவன் (தமிழாக்கம்). சென்னை 600042 : பாலம் பதிப்பகம், 25, அபிராமி அபார்ட்மென்ட்ஸ், மூன்றாவது பிரதான சாலை, தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: பாரதி அச்சகம்).
140 பக்கம், விலை: 14 இயூரோ, அளவு: 19×12 சமீ., ISBN: 978-93-82708-01-8.
இந்நூலில், இலையுதிர்காலப் பாடல் (சார்ல் போதலயர்), ஆனந்த மரணம் (சார்ல் போதலயர்), தியானம் (சார்ல் போதலயர்), பரிசின் சோகம் (சார்ல் போதலயர்), நேரங்காட்டி (சார்ல் போதலயர்), எதிரி (சார்ல் போதலயர்), உயர்வு (சார்ல் போதலயர்), நிலவின் சோகம் (சார்ல் போதலயர்), கண்ணீர் (ஆர்த்யூர் றாய்ம்போ), பள்ளத்தில் தூங்குபவன் (ஆர்த்யூர் றாய்ம்போ), இலையுதிர்காலப் பாடல் (போள் வேர்லன்), கூரைமேலாய் வானம் (போள் வேர்லன்), வெண்ணிலவு (போள் வேர்லன்), ஏரி (அல்போன்ஸ் து லமார்த்தீன்), ஏகாந்தம் (அல்போன்ஸ் து லமார்த்தீன்), ஞானம் (அல்போன்;ஸ் து லமார்த்தீன்), லக்ஸம்பேர்க் ஒழுங்கை (ஜெரார் து நேர்வல்), கல்லறை வாசகம் (ஜெரார் து நேர்வல்), இழந்த சொர்க்கம் (போள் வலேறி), என்னிளமையிருந்து பாடிய பூத்துக் குலுங்கும் மரமென நானிருந்தேன் (சார்ல் சந்த் பேவ்), மழைத்துளி (ஜ்யூல் சுப்பர்வியல்), எல்சாவின் விழிகள் (லூயி அறாகோன்), இரவின் தங்கக் கண்கள் (லூகோந்தது லில்), மர்மக் கிணறு (தெயோபீல் கோத்தியே), அஸ்தமனச் சூரியன்கள் (விக்ரர் ஹியூகோ) , இறைவனின் முன் ஓர் உயிர் (அல்பிரட் து மியூசே), கவிதையிடம் விடைபெறுதல் (லூயிஸ் அக்கெர்மான்), ஒரு காதலனின் வார்த்தைகள் (லூயிஸ் அக்கெர்மான்) ஆகிய பிரஞ்சுக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர் (1821-1867), விக்டர் ஹியுகோ (1802-1885), அல்போன்ஸ் து லமார்த்தீன் (1790-1869), அல்பிரட் து மியூசே (1810-1857) ஆகிய கவிஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.