16591 வ்ருத்தோப நிஷத் : முதுமை குறித்த கவிதைகள்.

என்.கோபி (தெலுங்கு மூலம்), ஆ.ஸ்ரீதர், அல்லடி உமா (ஆங்கில மொழிபெயர்ப்பாளர்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). சென்னை 600 092: புலம் வெளியீடு, 178, கு, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், 3வது பிரதான சாலை, நடேசன் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை 5: ஸ்ரீதுர்க்கா பிரின்டர்ஸ்).

84 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-81-9078-905-9.

வ்ருத்தோப நிஷத்: முதுமை குறித்த கவிதைகள்.

என்.கோபி (தெலுங்கு மூலம்), ஆ.ஸ்ரீதர், அல்லடி உமா (ஆங்கில மொழிபெயர்ப்பாளர்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-79-6.

என்.கோபி அவர்களால் தெலுங்கில் எழுதப்பட்ட இக்கவிதைகள், எம்.ஸ்ரீதர், அல்லடி உமா ஆகியோரால் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன. ஆங்கில வழித் தமிழாக்கத்தை சோ.ப. அவர்கள் மேற்கொண்டுள்ளார். முதியவன், நன்றியறிதல், மூத்த குடிமகன், மூன்று உலகங்கள், முதுமையுள் நுழைதல், முதுமையின் பாடல், தனிமை, தண்ணீர், அம்மாவும் மனுஷிதான், மரண வேளையில், நானுந்தான்,  நடை என்னும் மரபுரிமை, பாவம் உடம்பு, சாய்வு நாற்காலி, எழுபது வயது, அவளுந்தான், முதியோர் சகாயம், நாயனம்மா, அறளை, கரந்துறை எழுத்தாளன், பேரன், முதியோர் இல்லம், மருத்துவமனைகளில் கவிதையைக் காணமுடியாது, முன்னைநாள் காதல்கள், பூர்ண கும்பம், இதயத்துக்கு வயதில்லை, தத்துவஞானி, அச்சமில்லாப் பாட்டு, நேருக்குநேர் மரணத்துடன், விரும்பிய வேளை மரணம், மரணமிலா மரணம், கிழவி, கொள்ளுப் பாட்டனும் கொள்ளுப் பேர்த்தியும், அவர் சாக மாட்டார், எஞ்சியிருக்கும் வாழ்க்கை, மூத்தோரின் பிரக்ஞை, ஒரு கட்டம், குன்றுகளை அவதானிக்க வேண்டும், அழியாப் புகழ், கனிவு ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல் 259ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Online casino & Harbors at no cost

Articles Liberated to Play Novomatic Slot machines Preferred Games Mobile Harbors All Harbors Every time you put you to definitely, the number of re also-spins