16600 மகுட பங்கம் : நாடகப் பிரதி.

வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை. கிளிநொச்சி: கலாசாரப் பேரவை, கரைச்சி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

95 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41133-0-5.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில், 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான பரிசை வென்ற நூல். இது ஆசிரியரின் முதலாவது நூலாகும். இதில் முருகனின் முதற்போர், நடுகல் பேசும், சங்கிலியன், ஜீலியஸ் சீஸர், மகுட பங்கம், வாய்மை காத்த மன்னன் ஆகிய நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் 1991இல் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் இவை. 05.11.1953இல் பிறந்த நூலாசிரியர் வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை, யாழ்ப்பாணம்-மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, மலையாளபுரம் தெற்கை வாழ்விடமாகவும் கொண்டவர். இவரது தந்தையார் சின்னார் வல்லிபுரம், தென்னிந்திய நாடகக் கலைஞரான வேல்நாயக்கரைக் குருவாகக் கொண்டு வளர்ந்து பிரபல்யமான ஒரு நாடகக் கலைஞராவார். 

ஏனைய பதிவுகள்

Free Revolves No-deposit Bonuses 2024

Content Jackpot Ports Free Revolves No-deposit Earn Real money Vælg Et Internet casino Med Gratis Revolves Expiration Duration of A no deposit Bonus 100 percent