16605 கவி கனகசபை பாடிய சதாரம் (ஊஞ்சற் கவிதை).

கவி கனகசபை (மூலம்), அருள் செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1957. (தமிழ்நாடு: கலைமகள் பிரஸ், வடக்கன்குளம், நெல்லை ஜில்லா).

20 பக்கம், விலை: 30 சதம், அளவு: 18.5×10.5 சமீ.

கிழக்கிலங்கைக் கிராம கிராமிய இலக்கியச் செல்வங்கள் தொடரில் வெளிவந்த இரண்டாவது நூல் இதுவாகும். இறை வணக்கம், தேசவிசாரணை, மன்னவன் ஆசை, தந்தையும் தனயனும், கனவு, கனவுக் காரிகையைக் காணலும் திருமண விழாவும், நாடு நகர் இழத்தல், பிழைக்க வழிகாணல், மாயபுரி மன்னன் மயக்கம், தாசியின் சதிவலை, சதாரத்தின் தந்திரம், கணவனைக் காணல், கள்வனும் காரிகையும், கணையாளிப் பந்தயம், கடைக்காரியின் தவிப்பு, பெண்ணணங்கு அரசனாதல், கணவனைக் கண்டுபிடிக்க ஏற்பாடு, கணவனைக் காணல், நீதி வழங்கல் ஆகிய அத்தியாயங்களினூடாக இந்த ஊஞ்சற் கவிதை பாடப்பட்டுள்ளது. இதைப் பாடியவர்  கிழக்கிலங்கையின் கழுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கவி கனகசபை என்பாராவார். வீரகேசரி ஞாயிறு இதழில் தொடராக வெளிவந்தது. தொகுப்பாசிரியர் மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P. 2625).

ஏனைய பதிவுகள்

Svenska språket Online Casinon

Content Utpröva Inte me Spelpaus Hitta Suverän Casino Röra om Alla Casinon I Sverige Casino Utan Svensk perso Licens Med Bankid Blockeras Från Spelinspektionen Lirar