16606 குழல்வாய் மொழி: இரு குறுங்காவியங்கள்.

அ.ச.பாய்வா. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி). 

vii, 73 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-624-5849-01-7.

மூதூரைப் பிறப்படமாகக் கொண்ட ஏ.எஸ்.பாய்வா மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்டவர். ஒரு சிறந்த சிறுகதைப் படைப்பாளியாகவும் கவிஞராகவும் அறியப்பட்ட இவரின் “ஆத்ம விசாரம்” என்ற கதைத் தொகுதி 2008ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டல விருதையும் “தமிழியல்” விருதையும் பெற்றிருந்தது. இந்நூல் 35ஆவது மகுடம் பிரசுரமாக வெளிவந்துள்ளது. “காவிய மரபின் அடி மடி தேடிச்செல்ல வேண்டிய இன்றைய நிலையில் செய்யுள் மரபில் ஊறி, கவிதை இலக்கண வரம்புகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் கவிஞர் பாய்வா, இக்குறுங்காவியத்தை வெளியிடுவது காலத்தின் தேவையாகவுள்ளது. கற்றுணர்ந்த மரபை மீறும் இவரது இக்காவியங்களில், மரபும் புதிதும் கலந்து ஒலிக்கின்றன. சமகாலத்தைப் பேசும் இக்காவியம், கவிதைப் பரப்பில் நிலைத்து நின்று வாழும். மென்மையான சங்கீதம் போல் இழையோடும் கவிச்சரடுகளின் தொகுப்பாகவும் இதனைச் சொல்வேன்” (மகுடம் வி.மைக்கல் கொலின், வெளியீட்டுரையில்).

ஏனைய பதிவுகள்

Sveriges Ultimata Onlinekasinon 2024

Content Pay Du Play Hos Nya Online Casinon Nya Casinon Online 2024 Moment 1: Förstå Do Skilda Bonusarna Segrar Riktiga Pengar Tillsamman Casinobonusar Behovet att