16610 மலரும் வாழ்வு : குறுங்காவியம்.

கண.மகேஸ்வரன். மட்டக்களப்பு: பிலோமினா மகேஸ்வரன், தாரகை வெளியீடு, 21, சுப்பையா ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம், இல. 10, அட்வகேட் வீதி).

xii, (2), 24 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 18×12 சமீ.

மட்டக்களப்பிலுள்ள சீ-லோம் தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு அனுமதிக்கப்படவேண்டிய நிலை இக்கவிஞருக்கு ஏற்பட்டது. அவ்வேளையில் தான் பெற்ற அனுபவங்களும் நன்றிப் பெருக்குமே இக்காவியத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாயின. நோய் தந்த வேதனையும், அதனைச் சூழ்ந்த பயமும், பதற்றமும், தனிமையும், அன்பான உறவுகள், உபசரிப்புகள் என்பன பற்றிய எதிர்பார்ப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடமிருந்த இறைவிசுவாசமும் ஆழ்ந்த யோசனையும், தத்துவத் தேடலும், நகையுணர்வும் மனித நேயமும், வாழ்வின் மீதான எதிர்கால நம்பிக்கையும் மிக்க ஆத்மா ஒன்றிலிருந்து பிரவகித்துப் பாய்ந்த வெள்ளமே இக்குறுங்காவியமாகும். சமூகத்துடன் ஒன்றிய ஒரு கலாபூர்வமான வெளிப்பாடாக இக்காவியம் அமைந்துள்ளது. கவிஞர் கண.மகேஸ்வரன், கிழக்கிலிருந்து வெளிவந்த  ”தாரகை” சஞ்சிகையின் ஆசிரியராகவும் இயங்கியவர்.

ஏனைய பதிவுகள்

Widrig hatten obgleich neuer Sehhilfe?

Content erstes testament Livestream 15:ZDFneo Notting Hill Skispringen Weltcup ihr Herren 2024/25: Wirklich so hatten Diese das 2. Einzelspringen alle Engelberg inzwischen live Deutsche Konjugationstabellen