16616 அந்தரங்கம் : சிறுகதைகள்.

நோயல் நடேசன். சென்னை 600 092: புலம் வெளியீடு, 178F, அனுதீப் அப்பார்ட்மென்ட்ஸ்,  3வது பிரதான சாலை, நடேசன் நகர், இணை வெளியீடு, கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, 2021. (சென்னை: ஸ்ரீ துர்க்கா பிரிண்டர்ஸ்).

200 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9078-882-3.

இந்நூலில் நடேசன் அவ்வப்போது ஊடகங்களில் எழுதியிருந்த 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தான் கடந்துசென்ற அல்லது தான் கேள்விப்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தின் மன அருட்டலால் உருவானவை இக்கதைகள். ஜீலி, ருத்ரம், அந்த ஆறு மாதங்கள், உயிர்க்கொல்லி பாம்பு, அந்தரங்கம், கரும்புலி, ஒரு தாய் உறங்குகிறாள், சாபத் நாளில் மட்டும், பதுங்கு குழி, பிரேமலதா, மீண்டும் ஒரு ஆதாம், வெம்பல், சாகுந்தலம், ஆவி எதைத் தேடியது, அலைந்து திரியும் ஆவிகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. காதல்-காமம் என்பவற்றை பேசுபொருளாகக் கொண்ட கதைகளும் அரசியல் வன்முறையை கருவாகக் கொண்டவையுமான கதைகள்  இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்