16617 அம்ருதாவின் புதிர் வட்டங்கள்.

சித்தாந்தன் (இயற்பெயர்: சபாபதி உதயணன்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, ஆடியபாதம் வீதி, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 2021. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

x, 149 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-624-97477-1-5.

“கவிதை மனத்திலிருந்து கிளைத்து விரியும் சொற்களைக் கொண்டுதான் சித்தாந்தன் கதைகளையும் வளர்த்துச் செல்கின்றார். இவரது கதைகள் வெறும் கதைகளாக மட்டுமல்லாத ஒரு சமூக இயங்கியின் கேள்வியாகவும், கோபமாகவும் வெளிப்படுகின்றன. ஈழத்து கதை சொல்லிகளிடமிருந்து தன்னை வேறாக அடையாளப்படுத்தும் மொழியோடு தொடர்ந்து பயணிக்கும் சித்தாந்தன் தனது அனுபவத்தை வாசகனிடத்தில் தொற்றவைப்பதிலும் வெற்றி பெறுகிறார். இவரது மொழி, கதை சொல்லும் பாங்கு, வாசகனின் வாசிப்பனுபவம் விரிவடைந்து புதிய அனுபவவெளியை திறக்கும் வசியத்தன்மையைக் கொண்டுள்ளன.“ (தானா விஷ்ணு, பின்னட்டைக் குறிப்பு). சித்தாந்தன் 90களின் பிற்பகுதியிலிருந்து எழுதி வருகிறார். கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார். காலத்தின் புன்னகை (2000), துரத்தும் நிழல்களின் யுகம் (2010) ஆகிய கவிதைத் தொகுப்புகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இந்நூலின் கதைகள், நூறாயிரம் நுண்துளைகளால் பொறிக்கப்பட்ட பெயர் ஓர் அஞ்சலியுரை, அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு, அம்ருதாவின் புதிர் வட்டங்கள், ஓஇலு மற்றும் கறுப்பு வெள்ளைப் பிரதி, வேட்டையன், அரசனும் குதிரைவீரனும் அழியுங் காலத்தின் சனங்களும், நட்சத்திரங்களை மோகிப்பவன், புத்தரின் கண்ணீர், எழிலரசன் என்கிற சகுனி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் அர்த்தங்களின் வழி அர்த்தங்களை உருவாக்கும் கதைகள் என்ற தலைப்பில் சி.ரமேஷ் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

‎‎very hot Luxury Position To your Application Shop/h1>