16622 இங்கே நிறுத்தக் கூடாது : சிறுகதைகள்.

அ.முத்துலிங்கம். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).

(2), 127 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22.5×15 சமீ.

அ.முத்துலிங்கம் எழுதிய செர்ரி மரம், வந்துவிடு டுப்புடு, எக்கேலுவின் கதை, முதல் சம்பளம், குமர்ப்பிள்ளை, இங்கே நிறுத்தக் கூடாது, பிரதாப முதலியார். ச., ஒருமணி நேரம் முன்பு, எங்கேயோ இப்ப மூன்று மணி, என்னைத் திருப்பி எடு, வேதாகமத்தின் முதல் பாவம், உங்களுடன் வந்தவர் ஆகிய சிறுகதைகளும், மாவோவுக்காக ஆடை களைவது, லூனாவை எழுப்புவது ஆகிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அ.முத்துலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொக்குவில் கிராமத்தைச் சேர்ந்தவர். பட்டயக் கணக்காளரான இவர்  இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும் ஐ.நா.வுக்காகப் பணிபுரிந்தவர். 2000ஆம் ஆண்டில் ஓய்வுபெற்று கனடாவில் வாழ்ந்து வருகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68852).

ஏனைய பதிவுகள்