கீதா கணேஷ். யாழ்ப்பாணம்: திருமதி கணேஷ் லோககீதா, சிற்பனை, வேலணை மேற்கு, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 13: லங்கா புத்தகசாலை, 529/7, கே.சிறில் சீ. பெரேரா மாவத்தை).
xi, 95 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 17×11.5 சமீ., ISBN: 978-624-5787-08-1.
திருமதி லோககீதா கணேஷ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று இளங்கலைமாணிப் பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியையும் பயின்றவர். தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்மொழித்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் இவர் தான் எழுதிய 10 சிறுகதைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். குருத்து, தொலைவு, மொழிகளைத் தாண்டி, வழிநீளம், காத்திருப்பு, நிழல் தேடும் கிளைகள், இருளைக் கிழித்த கோடு, இவரும் இப்படித்தானோ?, சுயமரணம், வெளிச்சக்கூடு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. எத்தனங்கள் என்ற பெயரில் முன்னர் 2011இல் இவர் வழங்கிய சிறுகதைத் தொகுப்பையடுத்து வெளிவரும் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும்.