16627 உள்ளக் கிடங்கு.

ஆர்த்திகா சுவேந்திரன். திருக்கோணமலை: இலக்சுமி பிசுராலயம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

72 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-624-98245-1-5.

மல்லிகை மொழி என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறியப்பெற்ற ஆர்த்திகாவின் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். இதில் புரிதல், கோணற்(ப்) பார்வைகள், காதலின் பயணம், ஆழ்மனக் குமுறல், ஆறாவது திருப்பம், வட்டி போட்ட குட்டி, மருந்தில்லா வைரஸ், பாதை தொலைந்த பயணம் அகியஎட்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இலக்சுமி பிசுராலயத்தின் வெளியீட்டு வரிசையில் முதலாவது நூலாகவும் இது அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்