சியாமளா யோகேஸ்வரன். சென்னை 600 088: வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, 2022. (சென்னை 32: பத்மாவதி ஆப்செட்).
xii, 140 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-93-9127493-1.
இந்நூலில் நட்பும் ஒரு வரமே, இடைவெளிகள், விழுதென உறவுகள், விடியாத பொழுதுகள், ஊனமிங்கே மனதில் இல்லை, விடியலைத் தேடும் விட்டில்கள், கலையும் மேகங்கள், இறுதி யாத்திரை, விடுதலை நெருப்பில், காகித ஓடங்கள், வாழ்வினிலே வரமானான், காவோலைகள் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடப் பட்டதாரியான சியாமளா, அவுஸ்திரேலியாவில் “லக்டாலிஸ்” (Lactalis Australia) பால் தயாரிப்பு நிறுவனத்தில், தர நிர்ணயக் கட்டுப்பாட்டுப் பரிசோதகராகப் பணிபுரிந்து வருகிறார். வார இறுதி நாட்களில் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகவும் சேவையாற்றுகின்றார். இவரது முதலாவது நாவலான இதய ராகத்தைத் தொடர்ந்து வெளிவரும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது.