16630 ஊருக்குத் திரும்பணும் : சிறுகதைத் தொகுப்பு.

கோவிலூர் செல்வராஜன். லண்டன்: லக்கி மீடியா, 146, Cherrywood Lane, Mordon SM4 4HQ, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

ix, 118 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

கோவிலூர் செல்வராஜன், எழுபதுகளில் தாயகத்தில் மெய்கண்டான் நிறுவனத்தின் “கலாவல்லி”, “நட்சத்திரமாமா” ஆகிய சஞ்சிகைகளின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பல்துறைக் கலைஞராக பணியாற்றியவர். இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு, இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். பின்னாளில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை (1975), லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி (1978), இளமைக் கோவில் ஒன்று (1977) ஆகிய நாடகங்களை எழுதியிருந்தார். சிந்தாமணி, வீரகேசரி, மேகம் (லண்டன்), பறை (நோர்வே), பாரிஸ் – ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. பின்னாளில் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.

இந்நூலில் கோவிலூர் செல்வராஜனின் அம்மாவின் அசத்தல், தமிழரசி, எல்லைக் கிராமங்களின் தொல்லைகள், கண்ணைத் திறக்கணும் சாமி, கைவிட்டுப் போன கார், ஊருக்குத் திரும்பணும், சந்தையும் சந்திப்புகளும், அப்பா, அச்சங்கள், புதிய தலைமுறை, உயர்ந்த உள்ளங்கள், வீரையடி, ஒரு ஓடலியின் கனவு நனவாகிறது, எங்கே போய் முட்டிக்கிறது, தலைமுறை இடைவெளி ஆகிய பதினைந்து கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ll Tragamonedas Buffalo King

Tomando nuestro prototipo ayer, lo mismo pasa con los casinos con el pasar del tiempo giros de balde acerca de tragamonedas. Recibirás una una nâº