16633 ஒரு தோட்டத்தின் கதை.

குப்பிழான் ஐ. சண்முகன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-89-3.

என்ரை, மழை தூறிய ஒரு மாலைப் பொழுது, வாழ்க்கை என்பது, உயிரின் நடனம், கண்டறிதல், எங்கள் வீடு அல்லது இடைப்பிறவரல், ஒரு திவச நாள், ஒரு கதை ஒரு கவிதை அல்லது ஒரு கவிதைக் கதை, ஒரு தோட்டத்தின் கதை, சொற்களுக்குப் பெறுமதி இல்லை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 10 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. “மொழிக்கும் வடிவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அழகியலை முன்னிலைப்படுத்திய படைப்பாளிகளில் ஒருவராக குப்பிழான் ஐ.சண்முகன் இருக்கிறார். தனி மனித உறவுகளையும் உறவுச் சிக்கல்களையும் அக உலகையும் பேசுவதிலும் அதற்கான கவித்துவமான மொழிநடையைக் கையாண்டு அழகியல் ரீதியான ஒரு இலக்கியச் செல்நெறியை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்கிறார்” (அருண்மொழிவர்மன், பின்னட்டையில்). இந்நூல் 116ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Unlocking Your Cosmic Work of art

Content Cosmic Apogee From Fortune Finest On line Chance Tellers Out of 2024 Les Jardins Du Gambling establishment Luchon, Ports Games That always Victories Suggestions