16635 ஒரு பிடி சாம்பல்.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 104 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-5881-26-0.

கணிப்பு, இருதாய் ஒரு சேய், வெண்மதி, பிணைப்பு, கருகிய கனவுப் பூக்கள், பாறாங்கல், இதம், அருமை உடைய செயல், ஒரு பிடி சாம்பல், உளப்பசி, பனித்துகள், மனக்கண், பித்து, நதியோரத்து நாணல்கள், கருமணி, அகக்கனல் ஆகிய 16 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது மலரன்னையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பாகும். மலரன்னையின் கதைகள் இலகுவான வாசிப்புக்கு  ஏற்றவை. அதிகளவு வர்ணனைகளோ தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களோ எதுவுமற்ற ஆற்றொழுக்கான நடை இவருடையது. நாம் அன்றாடம் காணும் பாத்திரங்களே அவரின் கதாமாந்தர்களாக வருவதுண்டு. இந்நூல் 213ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Revisión De Mr Bet Casino

Content Diamond dogs juego de tragamonedas: Recibe Bonos Especiales: Otras Casinos Acerca de Algunos que Se podrí¡ Participar Si Te Gustó Mr Bet Sobre Una