16638 ஒற்றை யானை: சிறுகதைகள்.

மன்னார் அமுதன். மன்னார்: விழிகள் கலா மற்றம், இல. 12, வயல் வீதி, சின்னக்கடை, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xiv, 70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-98396-0-1.

இந்நூலில் மன்னார் அமுதன் எழுதிய சாவு வீடு, எஸ்தர், செத்தால் பிணம், கலைஞனின் வீடு, பினா வியாபாரம், மணியக்கா, யாக்கோபு 4:6, மனிதாபிமானிகள், மனமாற்றம், ஒற்றை யானை ஆகிய பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. காலத்தாலும், களத்தாலும் வேறுபட்டவை. பிரதேச, மாவட்ட மட்டப் போட்டிகளில் பரிசுபெற்றவை. 2009இல் தனது முதலாவது கவிதைத் தொகுதியை (விட்டு விடுதலை காண்) வெளியிட்ட மன்னார் அமுதன், 2011இல் அக்குறோணியையும், 2015இல் அன்னயாவினும் என்ற நூலையும் வெளியிட்டவர். இவரது நான்காவது நூலாகவும் முதலாவது சிறுகதைத் தொகுப்பாகவும் “ஒற்றை யானை” 2021இல் வெளிவந்துள்ளது. மன்னார் அமுதனின் முதலாவது சிறுகதையான “மனிதாபிமானிகள்” ஜீவநதி (கார்த்திகை 2010) இதழில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது படைப்புகள் மன்னா, மன்னல், தளவாசல், நடு ஆகிய அச்சு, இணைய இலக்கிய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

ஏனைய பதிவுகள்

Lucky Lightnin Annotation

Content Quels Sont Leurs Points forts Avec Majestic Slots Casino ? Des prograzmmes De credits Offertes par Majestic Slots Loyer De renvoi En Salle de