16645 கரை சேராப் படகுகள்.

திருநகர் நடராசா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, கரைச்சி கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, வைகாசி 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-26-8.

வெளியீட்டுரை (கோ. நாகேஸ்வரன்), என்னுரை (திருநகர் நடராசா) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆசிரியர் எழுதியுள்ள சமூகம், தெளிவு, மௌனமே பேசு, நீரில் படரும் நிழல்கள், தெளிவு இல்லாத உண்மைகள், இப்படியும் சில மனிதர்கள், கரைசேராப் படகுகள், போரில் புலர்ந்த வாழ்வு, ஈர்ப்பு, குறையும் நிறைவும், மனித நேயம் ஆகிய சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இளையதம்பி நடராசா, கிளிநொச்சியில் திருநகர் கிழக்கை சேர்ந்தவர். பரவிப்பாஞ்சான் கிராமத்தில் பிறந்த இவர் கிளிவெட்டி மத்திய கல்லூரியில் பயின்றவர். 1968இல் தினபதி பத்திரிகையில் “வாடாமல்லிகை” என்ற சிறுகதையுடன் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். திருக்கோணமலை இலக்கிய ஒன்றியத்தின் வெளியீடாக இவரது 30 சிறுகதைகளின் தொகுப்பு “மண்ணின் வேர்கள்” என்ற தலைப்பில் முன்னர் வெளிவந்திருந்தது. இந்நூல் 45ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Titanic Fruit Television

Content Sailing From the Classroom Close, far, regardless of where you are, you can watch Titanic online to your Valentine’s and other day of the