16646 கவசங்களைதல்.

எஸ்.நஸீறுதீன். வெல்லம்பிட்டியா: மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், 617, அவிஸ்ஸவளை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiv, 122 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-46-8.

வெள்ளை நிறத்திலொரு பூனை, இருக்கும் இடத்தை விட்டு, தொலைந்தவர்கள், அகவெளி தீண்டல், அவளும் இரு குறோட்டன்களும், கண்டுகொண்டேன், என் ஆசிய முத்தே, அதனை ஆராதனை செய் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. கவசங் களைதல் அவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். எழுபதுகளிலிருந்து எழுதிவரும் நஸீறுதீன் இலங்கை தமிழ் சிறுகதைப் படைப்புலகில் விசேடமான கணிப்பிற்குள்ளாக்கப்பட வேண்டியவர். நல்லதோர் வீணை செய்தே (1996), பெண்ணே போற்றி (1999), மறைத்தலின் அழகு (2002) என்பன நஸீறுதீனின் முன்னைய சிறுகதைத் தொகுதிகளாகும்.

ஏனைய பதிவுகள்

14947 மகுடம்: கலைஞர் கே.மோகன்குமார் பற்றிய ஓர் ஆவணப்பதிவு.

எம்.ஜெயகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: கிருஷ்ண கலாலயம், ஜீ 1/6, சாஞ்சி ஆராச்சித் தோட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (கொழும்பு: பிருந்தா எண்டர்பிரைசஸ்). ஒஒiஎ, 122 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500.,