16649 கனவிலும் அழியாச் சின்னம்: சிறுகதைகள்.

கிண்ணியா ஹஸன்ஜி (இயற்பெயர்: ஐதுருஸ் அப்துல் ஹஸன்). கிண்ணியா-2: ஜீ.பப்ளிகேஷன், சமூகநல கலைக் கலா மன்றம், பிரதான வீதி, 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xix, 137 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4841-01-7.

திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஹஸன்ஜியின் 15 சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு. நூலுக்கான அணிந்துரையை கலாபூஷணம் திருமலை நவம் அவர்கள் வழங்கியுள்ளார். “வதைகளிற் தேனை வைப்பது தேனி, கதைகளில் அதனை வைப்பது கதை ஞானி” என்ற தலைப்பில் கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி அவர்களின் சிறப்புரையும், கலாநிதி கலாபூஷணம் கே.எம்.எம். இக்பால் அவர்களின் பாராட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில், சங்கமம், கனவிலும் அழியாச் சின்னம் தாஜ்மஹால், ஒரு ரூபாய் நாணயம், துணை ஒன்று கிடைத்தது, அழியாத உண்மைகள், புனிதத் துளிகள், புது வசந்தங்கள், திருந்தாத ஜென்மங்கள், ஒரு நல்ல முடிவு, மௌன கீதங்கள், மனச் சுமைகள், பயணம், தத்துப் பிள்ளை, பசுமை நினைவுகள், காலத்திரை ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Learn Your finances

Content Could you Enjoy On line Blackjack At no cost?: A Night In Paris bonus game Jim Cramer’s Real cash: Sane Investing An insane World