16653 காளிமுத்துவின் பிரஜாவுரிமை, பழையதும் புதியதும்.

அ.செ.முருகானந்தன் (மூல ஆசிரியர்), கருணாகரன் (தொகுப்பாசிரியர்). அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×12 சமீ., ISBN: 978-624-6047-03-0.

இலங்கைத் தமிழ் சிறுகதை முன்னோடிகள் என்ற தொடரில் இரண்டாவதாக வெளிவரும் நூல் இது. அ.செ.முருகானந்தன்; (1921-1997) இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின் தொடக்ககால எழுத்தாளர்களில் முக்கியமானவர். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்த இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் மாணவராக 1938இல் இருந்தபோதே ஈழகேசரியில் எழுதத் தொடங்கியவர். 1946-1948 இல் வெளிவந்த மறுமலர்ச்சி இதழின் இணையாசிரியராகச் செயற்பட்டவர். ”காளிமுத்துவின் பிரஜாவுரிமை” என்ற கதை மலையக மக்களின் மீது திணிக்கப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் விளைவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”பழையதும் புதியதும்” என்ற கதை, மனித வாழ்க்கையில் பழையதுக்கும் புதியதுக்குமிடையிலான ஊசலாட்டமும் போராட்டமும் எப்போதுமே இருக்கும் என்பதை தன் காலத்தின் நிகழ்வுகளோடு இணைத்து கதையாக்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

12723 – சிற்பிகள்.

சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). சாவகச்சேரி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, சித்திரை 2013. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவை, அல்லாரை வீதி, மீசாலை). 72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

12009 – பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் ஆக்கங்கள்: நூல்விபரப் பட்டியல்.

எம்.ஐ. நிஸாமுதீன், நீலாம்பிகை நாகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்), எம்.பீ.எம்.பைரூஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: வெளியீட்டு விபரம், பதிப்பு ஆண்டு தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 361, ½, டாம் வீதி). 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,