16654 கிழக்கின் நூறு சிறுகதைகள்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம். திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xii, 800 பக்கம், விலை: ரூபா 1450., அளவு: 26×18 சமீ., ISBN: 978-955-4628-78-6.

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமான எழுத்தாளர்களின் பல காத்திரமான நூல்களைத் தெரிவு செய்து பதிப்பிக்கும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக வெளியிடப்பட்டுள்ள நூறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல். இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறு கதைகளைத் தொகுத்து, நூலுருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர் எழுத்தாளர் உமா வரதராஜன். இந்த மாகாணத்தின் மூவின மக்களும் வெவ்வேறு வகைகளில் துன்பங்களை எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் அதன் பிரதிபலிப்புகளை இந்தத் தொகுப்பின் கதைகளில் காணலாம். கற்பனாவாதம், ஜீவனோபாய நெருக்கடிகள், தனிமனித ஆசாபாசம், பாலுணர்வு, மனிதநேயம், இன ஒற்றுமை, இன விரிசல், அரசியல், தத்துவ விசாரம், சமூக சீர்திருத்தம், பெண்மனம், பரீட்சார்த்த எழுத்து முறைகள் என்ற வகைமைகளுக்குள் கொண்டு வரக்கூடிய 100 கதைகளை இந்தத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. கிழக்குக்கேயுரிய சடங்கு சம்பிரதாயங்களையும், விருந்தோம்பல் பண்புகளையும், பலம், பலவீனங்களையும் நம்பிக்கைகளையும், நாட்டுப்புற இசை போன்ற வட்டார வழக்குகளையும், மாற்றமடைந்து வரும் பெண்களின் நோக்கு நிலையையும் இந்தக் கதைகளில் சந்திக்கலாம்.

ஏனைய பதிவுகள்

Lobstermania 2 Slot machine game

Articles Gleaming Roses Slot Totally free Examine Super Victories Can i Turn on 100 percent free Revolves For the Slingo Lucky Larrys Lobstermania? Will you