பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1,1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (மின்நூல் வடிவம்).
171 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை களமாகக் கொண்டு எழுதப்பட்ட 21 சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்குகின்றன. இதில் சேருவலை சிறுத்தைகள், குடும்பிமலை புதையல், காத்தான்குடி ஜெசீமா, களுவம்மாவின் காதல், பாசிக்குடா பறங்கியர் இசைக்குழு, சம்மாந்துறை சங்கிலி சஹீட், ஆலமரத்து ஆவி, ஏறாவூர் தபால்காரன், முதல் சம்பளம், குமணகுளத்துக் கழுகுகள், யாழ்ப்பாணத்து மாப்பிள்ளை, டாக்சி டிரைவர், பலிக்கடாவான தமிழ் இந்துப் பெண், பொத்துவில் சுல்தான் போடியார், மூதூர் பணிப்பெண் படுகொலை, மருதமுனை மந்திரவாதி, ஆரையம்பதி உலக நாச்சியார், வெல்லாவெளி இரகசியம் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.