16656 கிளை தவறிய இலைகள்.

பூநகர் பொன். தில்லைநாதன். கிளிநொச்சி: பூநகரி கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், பூநகரி, 1வது பதிப்பு, 2019. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம்).

60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-44465-0-2.

நினைவழியா நினைவுகள் (2005), உண்மைகள் ஊமையாவதில்லை (2013) ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து வெளிவரும் ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு ஊடகங்களிலும் வெளியான கலாபூசணம் பொன். தில்லைநாதனின் கதைகளின் தொகுப்பு இது. கிளை தவறிய இலைகள், ஊனம் சிறிது தாக்கம் பெரிது, கௌரவம், தீனிப் பேய்கள், என்றோ விதைத்தது, புத்திர பாசம், கொம்பிப் பசு, தாய்க்குத் தாயாக வேண்டும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வயது முதிர்ந்தவர்களின் இன்றைய நிலைமையினையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவனாகி அவர்களின் மனக்குமுறல்களை தனது அறிவார்ந்த தேடல் மூலம் கலைச் சுவை கலந்து இன்புற வைப்பதாக இச்சிறுகதைத் தொகுப்பு அமைந்திருக்கின்றது.

ஏனைய பதிவுகள்