16657 குதிரை இல்லாத ராஜகுமாரன்.

ராஜாஜி ராஜகோபாலன். நாகர்கோவில் 629 001: சுதர்சன் புக்ஸ், 74, மணிமேடை கீழ்ப்புறம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (சென்னை 600 115: Re  Pro India Ltd).

224 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-83839-06-3.

வடமராட்சி புலோலி கிழக்கில் பிறந்து கடந்த மூன்று தசாப்தங்களாக கனடாவில் வசித்தவரும் இப்படைப்பாளியின் 15 தேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்நூலாகும். தனது வாழ்வியல் அனுபவங்களைத் தனக்கேயுரிய பாணியில் நகைச்சுவையாகவும் எளிய உரையாடல்கள் மூலமாகவும் கொண்டுசென்றுள்ளார். வடமராட்சிப் பிரதேசத்துக்கேயுரிய பேச்சு வழக்குச் சொற்பிரயோகங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இந்நூலில் மேலும் சில கேள்விகள், பௌருஷம், பத்தியம், விழிப்புகள், கறுத்தக் கொழும்பான், நிழலைத் தேடும் நிழல்கள், தெற்காலை போற ஒழுங்கை, மௌனத்தின் சப்தங்கள், ஆதலினால் காமம் செய்வீர், குதிரை இல்லாத ராஜகுமாரன், செம்பருத்தி, சுபத்திராவுக்கு என்ன நடந்துவிட்டது, கடவுளும் கோபாலபிள்ளையும், அந்த ஒருவனைத் தேடி, ஆசை வெட்கம் அறியும் ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. எழுபதுகளில் ஈழத்து எழுத்துலகப் பரப்பில் ஆழமாய்த் தடம் பதித்த படைப்பாளிகளில் ஒருவரான ராஜாஜி இராஜகோபாலன் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புகளுடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் இடையிடையே எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதைமாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாய் நுகரும்படியாகவும் நுட்பமாய்க் கதையை நகர்த்திச் செல்வதில் வெற்றிகண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12552 – தமிழ்: ஆண்டு 6.

த.கனகரத்தினம், இ.விசாகலிங்கம், எம்.ஆரிப், ஆ.ஐ.ளு.யு.கலீல் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 4வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1985, 2வது பதிப்பு, 1986, 3வது பதிப்பு, 1987. (கொழும்பு: