16658 குயில் குஞ்சுகள்.

இந்திராணி புஸ்பராஜா. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி). 

90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4628-07-6.

ஊனமாகும் உறவுகள், ஒரு தாளம் தப்பாகிறது, குயில் குஞ்சுகள், இளமை எனும் புயற்காற்று, பக்கத்து வீட்டு பாலு மாமா, ஒரு தாயின் கனவுகள் கலைகின்றன, நியாயப்படுத்த முடியாத நியாயங்கள், பூக்களைப் பொசுக்காதீர்கள், போலிப் பூக்கள், கருகும் மொட்டுக்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெண்களையும் சிறுவர்களையும் சுற்றிப் பின்னப்பட்ட கதைகள் இவை. இருட்டில் வாழும் சிலரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முனையும் ஒரு ஆசிரியரின் சிந்தனைப் போக்கு இக்கதைகளில் ஊடுபரவியுள்ளன.

ஏனைய பதிவுகள்

16772 மன ஊஞ்சல்.

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புமராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv,

12734 – வடகோவை சபாபதி நாவலரின் நான்மணிகள்.

.யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (தொகுப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆடி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). viii, 156 பக்கம், விலை: ரூபா 400., அளவு: