16660 குறை ஒன்றும் இல்லை.

துறையூரான் எம்.சிவானந்தன். மன்னார்: தழல் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 2015. (மன்னார்: நித்திலம் பதிப்பகம்).

116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-7716-00-8.

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தழல் இலக்கிய வட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராகவும் திகழ்ந்துவரும் துறையூரானின் ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு. இதில் திருவிழா  வியாபாரம், அறுவடை, விடியல், பழைய பாட்டு, சாதி இரண்டொழிய, சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம், மறுபக்கம், யாரொடு நோகேன், குறையொன்றும் இல்லை ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. “மௌனப் பார்வை” என்ற குறுநாவல் வழியாக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான துறையூரான் தான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து மீண்டும் மற்றொரு நூலை எமக்களித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14641 மடிவேன் என்று நினைத்தாயா?

மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18×12.5