16676 தேனகச் சிறுகதைகள்.

த.மலர்ச்செல்வன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: பிரதேச செயலக கலாசாரப் பேரவை, மண்முனை வடக்கு, 1வது பதிப்பு, ஜீலை 2008. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

(6), 139 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை வருடம் தோறும் முத்தமிழ் விழாவினையும் அதையொட்டி தேனக மலரினையும் வெளியிட்டு வருகின்றது. இம்முறை 1994 முதல் 2007 வரையிலான காலப்பகுதிகளில் வெளிவந்த தேனக மலர்களில் இடம்பெற்றிருந்த சிறுகதைகளைத் தொகுத்து தனித் தொகுதியாக வெளியிட்டுள்ளது. இவற்றில் முத்தமிழ் விழாவிற்கான திறந்த மட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற கதைகளும், சிறப்புச் சிறுகதைகளும் அடங்குகின்றன. எல்லைகள் தாண்டி, பெரிய எழுத்து, பரிநிர்வாணம், ஒரு நிலவுச் சிறையும் இரண்டு ஆயுட் கைதிகளும், ஆத்மவிசாரம், கறுப்பு நாய், வரம், இறக்கை விரிக்கும் மரம், கொள்ளிவாய்ப் பிசாசுகள், நெஞ்சு பொறுக்குதில்லையே, மண்ணாசை, அரசியின் விருந்து, இது ஒன்றும் புதிய கதை அல்ல, யாருமிங்கு தீர்ப்பிடலாம், அப்பா, ஆசாரங்கள், உரம், நட்பொன்று நாடகமாகிறது ஆகிய 18 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12717 – கிரிக்கெட் உலக சாதனையாளர்கள்.

நூராணியா ஹசன். மாவனல்ல: நூராணியா பதிப்பகம், 157, உயன்வத்தை, தெவனகல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் அச்சகம், 119 பிரதான வீதி). xi, 60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா