எஸ்.கிருஷ்ணமூர்த்தி (தொகுப்பாசிரியர்). சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
142 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22×14 சமீ., ISBN: 978-81-960544-3-4.
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இவை வெவ்வேறு கோணங்களில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. தென் துருவத் தேவதை (கன்பரா யோகன்), பொதுச் சுடர் (தெய்வீகன்), தொத்து வியாதிகள் (அருண் விஜயராணி), பனை (அசன்), புதர்க் காடுகளில் (முருகபூபதி), வெளவால்கள் (நடேசன்), ஒரு வீடு இரு வேறு உலகம் (எஸ்.கிருஸ்ணமூர்த்தி), விளைமீன் (ஜே.கே), பறவைகளின் நண்பன் (தாமரைச் செல்வி), கங்காரு (ஆசி கந்தராஜா), விளக்கின் இருள் (கே.எஸ்.சுதாகர்), அவள் ஒரு பூங்கொத்து (தேவகி கருணாகரன்) ஆகிய பன்னிரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிறுகதை, பத்தியெழுத்து, மற்றும் சினிமா விமர்சனம் என எழுதிவரும் கிருஷ்ணமூர்த்தி, அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திலும் அங்கம் வகிக்கின்றார். இவரது படைப்புகளின் தொகுப்பாக திரைக்கண் (சினிமா விமர்சனம்), நோ போல் (சிறுகதைகள்), மறுபக்கம் (பத்திகளும் கதைகளும்) ஆகிய மூன்று நூல்கள் முன்னதாக வெளிவந்துள்ளன. யூகலிப்டஸ் மரங்கள் அவுஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் மரமாகவும் அந்த நாட்டுக்கே பிரத்தியேகமான குவாலா கரடிகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றது. அந்த மரங்களிலிருந்து சாரமாகப் பெறப்படும் தைலத்தைப் போன்று இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் சாராம்சத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுக்கப்பட்ட இச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு ”தைலம்” என்று பெயரிட்டுள்ளமை சாலப்பொருந்துகின்றது.