16678 தொல்லையினும் பிறவி (சிறுகதைத் தொகுப்பு).

சு.சிவராசா. யாழ்ப்பாணம்: நல்லூர் இலக்கிய நண்பர்கள், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (யாழ்ப்பாணம்: போஸ்கோ அச்சகம், 252 பருத்தித்துறை வீதி, நல்லூர்).

vi, 99 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

இந்தப் படைப்பாளி சமூகத்தைப் பார்த்தவாறு எழுதாது, கேட்டுணர்ந்தவாறு படைத்துள்ளார். இவரது புறவொளி மங்கியிருந்தாலும், அகவொளியின் தரிசனங்களாக இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் அமைந்துள்ளன. நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவராசா 1949இல் பிறந்தவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக, தனது கண்பார்வையை இழக்கும் வரை, 1985 வரை பணியாற்றியுள்ளார். 1995இற்குப் பின்னர் எழுத்துலகில் பிரவேசித்தவர். சஞ்சீவியில் இவரது முதற் சிறுகதை வெளிவந்தது. தொடர்ந்து அமுது, சுந்தரன், ஈழநாதம் முதலான இதழ்களில் இவரது சிறுகதைகள் பிரசுரமாயின. இவரது சிறுகதைத் தொகுதியான ”நம்பிக்கை பிறந்தது” 1999 இல் வெளிவந்தது. அதன் பின்னர் ”முடிவில்லாத ஆரம்பங்கள்” என்ற குறுநாவல் தொகுதி வெளிவந்தது. ”தொல்லையினும் பிறவி” சிவராசாவின் மூன்றாவது நூலாகவும், இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகவும் 2005இல் வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் நெஞ்சின் நிழல், சீற்றில் இருக்கிறான், மீண்டும் ஒரு அகல்யா, இது ஒரு வம்புக் கதை, வனவாசம், வந்த வழியைப் பார்த்து, மூன்றாம் தரப்பு, எண்ணத்தின் வண்ணம், திரும்பாத ஊருக்குத் திறந்த பாதை, கணபதி கலியாணம், பட்டோலை, ஒரு சோக்கான காதல் கதை, தரை இறங்குகின்ற புறாக்கள், வினை விதைத்தவன், கணிப்பீட்டிற்காகக் காத்திருக்கிறாள், இருட்டில் ஒரு அழகான கதை, புறணி பாடுவார், உறவுப் பாலங்கள், தொல்லையிலும் பிறகு, பாரொடு விண்ணாய்ப் பரந்து ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

The fresh Ports On line

Content Play Out of Any Tool Do you Earn A real income From Offline Ports? How exactly we Opinion The brand new Slot Online game