16680 நரையன்: சிறுகதைகள்.

தமிழ்க் கவி. பிரான்ஸ்: நடு வெளியீடு, 03, Allee La Boetie, 93270 Sevran, 1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், விலை: ரூபா 400., இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-98471-3-2.

இது தமிழ்க்கவியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு. கல்லோயா கறுத்தப் போத்தல், நரையன், உயிருக்குப் பின், கற்பெனப்படுவது, போருக்குள், ஒப்பாரி, சாவை நோக்கி, பெண்ணுக்குள் என்ன உண்டு, காணி வைத்தியம், நல்லவர்கள், பாடுபட்ட சிலுவையள், கொடுத்த இன்பம், வேதாளங்கள், மாற்றங்கள், சிவில் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட தமிழ்க்கவியின் பதினைந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நீண்ட பெரும் யுத்தத்தை நாங்கள் கடந்து நின்றாலும் இன்றும் எம்மில் பலர் ”நரைத்த சிந்தனைகளை உடையவர்களாகவே இருக்கின்றார்கள்” என்ற யதார்த்தத்தினை இத்தொகுப்பில் உள்ள அனைத்துச் சிறுகதைகளும் அவற்றின் குறுக்குவெட்டு முகத்திற் சொல்லி நிற்கின்றன. தமிழ்க்கவி (19.07.1947) ஈழத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும் களச்செயற்பட்டாளருமாவார். விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆண்டுகள் கலை – பண்பாட்டு துறையில் பணியாற்றியவர். வீதி மற்றும் மேடை நாடகங்கள், வானொலி – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேச்சு, கவிதை, தொடர் என்று பல களங்களில் இயங்கியவர். இவர் மகப்பேற்று மருத்துவிச்சியாகவும் பல காலம் தாயகத்தில் பணியாற்றியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

La Ruleta Aleatoria

Content Biografía De la Ruleta Enteran Las Normas De el Ruleta En Ponerte A Juguetear Utilidades Específicas De la Ruleta Sobre Camino Preguntas Frecuentes Sobre