சிவராசா ஒசாநிதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
x, 86 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-80-2.
இது தான் தைப்பொங்கல், இதே இடம் இதே காலம், எங்கே மனிதாபிமானம், கடிதம், தெருவோர ஞானிகள், நிம்மதி, நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, முகத்திரை, யார் குற்றவாளி, வைரஸ் போர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 260ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இக்கதைகள் சமூகப் பிரச்சினைகள், உறவுகளின் முக்கியத்துவம் சமீபகால நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் வகையில் அமைந்துள்ளன. மட்டக்களப்புப் பேச்சு வழக்கு இவரது கதைகளில் விரவிக் காணப்படுகின்றன. சிவராசா ஒசாநிதி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் தமிழ் கற்கைகள் துறையில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.